சிவில்பாதுகாப்பு குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை(7ஆம் திகதி) ஜெயந்திபுரம் சிரேஸ்ட பிரஜைகள் சங்க கட்டடத்தில் சமூக பொலிஸ் குழு தலைவர் சு.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தயால் டிகா வத்துர அவர்களும், சமூக பொலிஸ் குழு பேரவை தலைவர் எஸ்.ராஜன், செயலாளர் கே.யோகவேல், வணபிதா பி.டபிள்யு.மரியதாஸ், கிராம உத்தியோகத்தர் வ.லவக்குமார் மற்றும் ஜெயந்திபுரம் சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிரேஸ்ட பிரஜைகள் சங்க உறுப்பினர்கள், சமூர்த்தி குழுக்களின் உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் குற்றச்செயல்கள் நடைபெறுவதைத் தவிர்ப்பதற்கு அனைத்து பொதுமக்களும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை பாரபட்சமின்றி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும்,பெண்கள் இரவு நேரங்களில் பயமின்றி நடமாடும் நிலையினை ஏற்படுத்த முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்தார்.
















