(ரவிப்ரியா)
பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த சிறுவர் விளையாட்டு விழா பட்டிருப்பு கல்வி வலயத்தில் இவ்வாண்டிற்கான முதலாவது சிறுவர் விளையாட்டு விழாவாக, அதிக சிரத்தை எடுத்த சற்று ஆடம்பரமாக அரங்கேறியது.பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கமும். அதிவிசேட அதிதிகளான வலயகல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான மா.நடராஜா மற்றும் ஞா.கிருஷ;ணபிள்ளை ஆகியோரும்,; அதிசிறப்பு அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஹசீன, சட்டத்தரணி ஜெ.இராஜேந்திரன், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால் ஆகியோர். கலந்து கொண்டனர். மற்றும் அதிபர்கள். ஆலயங்களின் தலைவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கழுத்து நிறைந்த மாலை அணிவித்து அதிதிகள் வாண்ட் வாத்தியம் சகிதம் வரவேற்கப்பட்டனர். குறுகிய காலத்தில் சீர்செய்யப்பட்ட குறுகிய மைதானத்தில் குழந்தைகளில் விளையாட்டு அனைவரையும் குதூகலிக்க வைக்கத் தவறவில்லை. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் க.சுதர்சன், மற்றும் பெற்றோர் பங்களிப்பும் நிதி அனுசரணையும் இந் நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு பக்கபலமாக இருந்தது. அலங்கார மேடை அமைத்து, அலங்கார வேலி அமைத்து மாணவர்களை கட்டுக்கோப்பாக வைத்திருந்து, விளையாட்டு விழா சிறப்பாக அமைவதற்கு அடிகோலியது.
உடற்பயிற்சி கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது. முக்கிய அதிதிகளுக்கு நினைவுச்சின்னமும், பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கையடக்க கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

























