மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று 13ஆம் திகதி பிற்பகல் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறறது.

இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இக் கூட்டத்தில்  புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாணபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், பிரதேச யெலாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் திணைக்கள ரீதியாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் அத் திணைக்களங்களால் மக்களுக்காக நிறைவேற்றப்படாத விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

குறிப்பாக இதன்போது , மின்சாரம் வழங்கல், குடிநீர் இணைப்பு, வைத்தியசாலை வள குறைபாடுகள், போக்குவரத்து வீதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் மக்களால் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் உரிய திணைக்கள பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டு பல் பிரச்சனைகள் தீர்வுகாணப்பட்டது.

மேலும் இதன்போது காஞ்சிரங்குடா கிராம சேவகர் பிரிவில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஓர் தனியார் நிறுவனத்தால் அமைந்து அரைப்பகுதி வேலையுடன் காணப்பட்ட பாலர் பாடசாலை கட்டடத்தினை அப்பிரதேச மக்கள் முழுமையாக நிர்மாணித்துத் தரும்படி கேட்டதற்கமைவாக, அதனை தனது மீள்குடியேற்ற அமைச்சினால் முழுமையாக செய்து தருவதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.