மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு புதிதாக அண்மையில் நியமிக்கப்பட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியத்தை வரவேற்கும் நிகழ்வு நேற்று(11) சனிக்கிழமை மாலை முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஒளிக்கல்லூரி கட்டிடத்தில் இடம்பெற்றது.
ஒளிக்கல்லூரி அமைப்பின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பேராசிரியர் மா.செல்வராசா, பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.மகேந்திரகுமார், ஹரிகரராஜ், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், முனைப்பு நிறுவனத்தின் தலைவர் மா.குமாரசாமி மற்றும் பாடசாலையின் அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது வலயக்கல்விப் பணிப்பாளருக்கு நினைவுப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.












