(-ஏ.எச்.ஏ. ஹுஸைன் )மட்டக்களப்பு கல்வி வலயப் பிரிவிலுள்ள தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலயத்தின் 142வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற பாடசாலைத் தின விழாவில் மாணவர்கள் தங்கள் ஆற்றல் ஆளுமையை வெளிப்படுத்தினர்.
நடனம், நாடகம் மற்றும் ஆற்றல் வெளிப்பாட்டுச் செயற்பாடுகளில் பிரகாசித்த மாணவர்கள் அதிதிகளால் பாராட்டப்பட்டதோடு சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
பாடசாலை அதிபர் மரியான் பற்றிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




































