(இ.சுதாகரன்)
தேசிய டெங்கு ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார காரியாலயம் ஏற்பாடு செய்த டெங்கு நுளம்பின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன் கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் தலமையில் பெரியகல்லாற்றில் நடைபெற்றது.
நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நந்தலாள் மற்றும் பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி அபூபக்கர் மற்றும் களுதாவளை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் மற்றும் ஓந்தாச்சிமடம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் , பிரதேச குடும்பநல உத்தியோகத்தர்கள் ,
பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,இராணுவத்தினர் பொலிஸார் கிராம சேவை உத்தியோகத்தர்கள, சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பில் இரா.பிரேமராஜா வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் இகளுவாஞ்சிகுடி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இபொது நிறுவனங்களின் பிரதி நிதிகள் என சுமார் நூற்றிக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உத்தியோகத்தர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடியிருப்புக்களுக்கும் சென்று டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அவதானித்ததுடன் டெங்கு நுளம்பினால் ஏற்படும் அபாயங்கள் தொடர்பாக மக்களை விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன் டெங்கு நுளம்பு பரவக் கூடிய நிலையில் சுற்றாடலை வைத்திருந்த பலருக்கு எதிராக வழக்குப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய டெங்கு ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார காரியாலயம் ஏற்பாடு செய்த டெங்கு நுளம்பின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன் கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் தலமையில் பெரியகல்லாற்றில் நடைபெற்றது.நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நந்தலாள் மற்றும் பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி அபூபக்கர் மற்றும் களுதாவளை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் மற்றும் ஓந்தாச்சிமடம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் , பிரதேச குடும்பநல உத்தியோகத்தர்கள் ,