(சித்தா)
ஆரம்ப்பப் பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் முகமாக கோட்ட மட்டத்திலான மாணவர் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்று மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் போரதீவுப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன் தலைமையில் கணித, விஞ்ஞான, வாசிப்பு முகாம். இடம் பெற்றது. இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன், மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான திருமதி.ர.நவரெட்ணராசா, திருமதி.த.சபாரெட்ணம், உட்பட ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இம் முகாமில் மாணவர்கள் செயற்பாடுகள் மூலம் கற்றல் - கற்பித்தலை முன்னெடுத்தனர்.





























