வாகரையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு : ஆறுபேர் கைது,பெருமளவு கசிப்பு கைப்பற்றல்


(கான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான வாகரை பிரதேசசெயலாளர் பகுதியிலுள்ள கட்டுமுறிவு கிராமத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் மறைமுகமான முறையில் செயற்பட்டுவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் நேற்று முழுநாளும் சுற்றி வளைக்கட்டது.

கசிப்பினை உற்பத்திசெய்து விற்பனை செய்யும் 'மாபியா' கும்பல் பற்றிய தகவல் கிடைக்கப் பெற்றதன் பெயரில் கிழக்குமாகாண உதவி மதுவரி ஆணையாளர் கே.எம்.ஜி.பண்டாரவின் பணிப்புரையின்கீழ்  மட்டக்களப்பு,அம்பாரை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராசா சுசாதரன் தலைமையில் ; மட்டக்களப்பு கல்முனை மதுவரி திணைக்கள  மதுவரி பரிசோதகர்களான எஸ்.செல்வக்குமார், பி.காண்டீபன், கே.வாசன் மதுவரி உத்தியோகத்தர்களாகிய குகனேசன், தசாநாயக்க, ஜெயானந்தன், திலோஜன், சுபோஸ், ஜனானந்தா,செல்வராசா,நிறோஜன், சாரதி தனன்ஜய ஆகியோர் இணைந்து  மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு  முற்றுகையின்போது சட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆறு  பேரையும்; பாரிய பரல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு  கோடாவையும் கைப்பற்றினர். குறித்த முற்றுகையின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணைமுறியில் விடப்பட்டு 2017.03.22ம் திகதி வாகரை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.


250 லீற்றர் கசிப்பு 1200 லீற்றர் கோடா உட்பட பெருமளவு இஸ்பிறிட் மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.