மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா செவ்வாய்கிழமை 28ஆம் திகதி வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் என்.ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்தார்.
இவ் விழாவின்போது கடந்த 2015ஆம் ஆண்டில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களுக்கும், போட்டிகளிலும் ஏனைய துறைகளிலும் திறமைகளை வௌிப்படுத்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பரில்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பட்டனர்.
இந் நிகழ்வின்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம் உதவி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநிதன்,நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறியியலாளர் எஸ்.சதீஸ்குமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.யோகராசா மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.












