நாவலடி கடற்கரையில் சடலம் மீட்பு

நாவலடி பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

 இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 55 - 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் என அடையாளம் காணப்பட்ட போதிலும், மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.