கடுக்காமுனை ஸ்ரீ லக்ஸ்மி நாராயணர் ஆலய வருடாந்த உற்சவ திருவிழா 2017


(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் கடுக்காமுனை கிராமத்தில் அருள்நேசபுரம் எனுமிடத்தில் வில்லுக்குளத்தருகே எளுந்தருளி
அருள்பாலிக்கும் ஸ்ரீ லக்ஸ்மி நாராயணர் ஆலய வருடாந்த உற்சவ திருவிழா இன்று (26) மாலை கிரியைகள் ஆரம்பமாகி 01.05.2017 திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தீர்த்த உற்சவத்துடன் இனிது நிறைவுபெறவுள்ளது. அருட்கவியரசு விஸ்வப்பிரமம் வை.இ.எஸ் காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள உற்சவ காலங்களில் அனைத்து சைவ மெய்யடியார்களும் வருகைதந்து அருளினை பெற்றேகுமாறு இறையன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.


இவ்வண்ணம்
ஆலய பரிபாலன சபை.