ஈழத்தில் புகழ்பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றாக திகழும் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாள் திருவிழா புதன்கிழமையன்று(12ஆம் திகதி) மட்டக்களப்பு மாவட்ட இந்து மக்களால் சிறப்பிக்கப்பட்டது.இத் திருவிழா மட்டக்களப்பு மக்களால் முன்னைய காலங்களில் பல வருடங்களாக நடாத்தப்பட்டுவந்தது பின்னர், நாட்டில் எற்பட்ட யுத்த சூழ்நிலையால் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் தற்போதுவரை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மக்களினால் இத் திருவிழா நடாத்தப்பட்டு வருகின்றது.
புதன்கிழமையன்று பார்வதி அம்பாள் சமேத பரமேஸ்வரரின் பகல் மற்றும் இரவுப்பூசையுடன் வீதியுலாவும் வெகு சிறப்புடன் இடம்பெற்றது.
இத் திருவிழாவின்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பனருமான சீனித்தம்பி யோகேஸ்வரன், மட்டக்களப்பு வர்த்தகர் சங்க தலைவர் எம்.செல்வராசா மற்றும் நிருவாகிகள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன், இப் பூசை நிகழ்வுகளில் வடக்கு, கிழக்கு மகாணங்களிலிருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு பார்வதி அம்பாள் சமேத பரமேஸ்வரரை தரிசித்துச் சென்றனர்.




















