மாட்டு சாண எரிவாயு மூலம் இயங்கும் பஸ்

மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயு மூலம் இயங்கும் பஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பஸ்சில் ஒரு ரூபாய்க்கு (இந்திய நாணயத்தில்) 17 கி.மீ வரை பயணிக்க முடியும்.
கொல்கத்தாவில் போனிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம், இந்த பஸ்சை கண்டுபிடித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. செலவு ரூ.13 லட்சம். 54 இருக்கைகள் கொண்டது. கடந்த 8 ஆண்டுகளா மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக மாட்டு சாண எரிபொருள் பஸ் செயல்படத்தொடங்கியுள்ளது.


மாட்டு சாணத்தில் ஓடும் பஸ் கொல்கத்தாவில் நேற்று முதல் சேவையைத் தொடங்கியது.


மாட்டு சாணத்தில் இருந்து கிடைக்கும் எரிவாயுவில் மீத்தேன் அடங்கியுள்ளது. நச்சுத் தன்மையை வெளிப்படுத்தாத இந்தஎரிவாயுவை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ மாட்டு சாண எரிவாயு தயாரிக்க 20 ரூபாய் செலவாகிறது. ஒரு கிலோ எரிவாயுவில்  6 கி.மீ வரை பேருந்தை இயக்க முடியும்.