மாபெரும் வியாபார சந்தையும் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும்


(தாஸன்)
பிரண்டினா நதி நிறுவனத்தின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி உதவி விவசாய பணிப்பாளர் அலுவலகத்துக்கு(விரிவாக்கம்) அருகாமையில், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் வியாபார சந்தையும் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இன்று(11) இடம்பெற்றது.

பிரண்டினா நிதி நிறுவனத்தின் பிரதேச முகாமையாளர் ரஜனி யோகநாதன்,உதவி விவசாய பணிப்பாளர் செல்வி எம்.சிவஞானம்,விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுட்ப அலுவலர் தர்சன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு வியாபார சந்தை மற்றும் கண்காட்சிக்கூடத்தினை மக்கள் பார்வைக்காக திறந்து வைத்தனர்.

பிரண்டினா மற்றும் விதாதா வள நிலையத்தால் பயிற்சியளிக்கப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களும் விவசாயத் திணைக்களத்தின் உற்பத்திகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.


பெரண்டினா நுண்நிதி நிறுவன சிறுதொழில் முயற்சியாளர்கள் மற்றும் விதாதா வள நிலைய சுய தொழில் முயற்சியாளர்களினதும் வியாபார சந்தையை வலுப்படுத்தி பொருளாதராத்தை மேம்படுத்தும் முகமாகவே மாபெரும் வியாபார சந்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.