கல்குடா கல்வி வலயத்தில் விஞ்ஞான பாடத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

ஜெ.ஜெய்ஷிகன்)
கல்குடா கல்வி வலயத்தில் விஞ்ஞான பாடத்தில் 2015,2016ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டம், மாகாண மட்டம்,வலய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 07.05.2017ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

விஞ்ஞான பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர்  எஸ். தர்மபாலன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ரவிராஜ், உதவிக்கல்விப் பணிப்பாளர் யோகராஜா மற்றும்    கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான நா.குணலிங்கம், ச.பரமேஸ்வரன், ஏ.ஜெயஜீவன் ,ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.