மட்/ புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 03.04.2017 திங்கட்கிழமை அன்று வித்தியாலயத்தின் புதிதாக பதவியேற்ற அதிபர் கு.பாஸ்கரன் தலைமையில் பாடசாலையின் அலங்கார நுழைவாயில் மற்றும் சரஸ்வதி சிலை திரைநீக்கம் என்பன இடம்பெற்றன இதற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேசசெயலாளர் கு.குணநாதன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்) ஜனாப் S.M.ஹைதர் அலி கௌரவ விருந்தினராக கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.சுகுமார் மற்றும் அனுசரணையாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆலய பரிபாலன சபையினர், சமுக அமைப்புக்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.இங்கு தலைமை உரையாற்றிய அதிபர் கு.பாஸ்கரன் அவர்கள் உரையாற்றுகையில் பாடசாலையின் கவின்நிலையை மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு விரும்பத்தக்க பாடசாலையாக மாற்றி அமைப்பதின் மூலமாக கற்றல், கற்பித்தல் சிறப்பாக நடைபெறும் என்றும் மேலும் இவ் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தார்.






















