காணாமல்போன மட்டக்களப்பு யுவதி திருகோணமலையில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகிழூர்முனை எனும் கிராமத்தில் கடந்த 28 ஆம் திகதி காணாமல்போன யுவதி ஏப்ரல் 01ஆம் திகதி மீட்கப்பட்டதாக யுவதியின் பெற்றோர் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர் என மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.



தமது 22 வயதுடைய திருமணமாகாத மகளைக் காணவில்லை என பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழு மட்டக்களப்பு பணிமனையில் கடந்த 29ஆம் திகதி முறையிட்டிருந்ததோடு கண்டுபிடித்துத் தருமாறும் கேட்டிருந்தனர்.

இவர் திருகோணமலை நகரில் வைத்து சனிக்கிழமை (01.04.2017) கண்டு பிடிக்கப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி அப்துல் அஸீஸிடம் தெரிவித்துள்ள பெற்றோர் அவர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் யுவதி குறிப்பிடும் தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரைத் தேடும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மனித உரிமைகள் ஆணைக்குழு மட்டக்களப்புப் பணிமனை விரிவான  விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இதனிடையே இந்த யுவதியின் சகோதரியான கங்காதரன் மாதுமி (வயது 25) எனும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவி கடந்த 2014 பெப்ரவரி  27) அன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
அரவம் தீண்டியதால் அவர் இறந்ததாகவே அப்போது கூறப்பட்டது.
ஆயினும் அந்த மரணம் தொடர்பான மர்மம் இன்னமும் நீடித்து வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர