கல்லடியில் மாணவி துஷ்பிரயோகம்; மாணவனுக்கு விளக்கமறியல்

கல்லடி உப்போடைப் பிரதேசத்தில் 14 வயதுடைய மாணவியொருவரைத் துஷ்பிரயோகம் செய்த, அதே பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவர்  கைது செய்யப்பட்டார்.


இம்மாணவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் எம்.ஐ.றிஸ்வி முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்திய போது, சந்தேகநபரான மாணவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

மாணவன், குறித்த மாணவியைத் தொடர்ச்சியாகத் துஷ்பிரயோகத்தக்கு உட்படுத்தி வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, தனது பாட்டியிடம் விடயத்தைக் கூறியதையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பாட்டியினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் இருவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்பவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.