கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளை வழங்கி வாக்கினைப் பெற்று ஆட்சியமைத்த இந்த நல்லாட்சி என கூறப்படும் அரசாங்கத்தின் மேலிருந்த நம்பிக்கை அற்றுப் போயுள்ளது. நம்பிக்கை இழந்த வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் துன்பகரமான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர். என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமலும் அபிவிருத்தி வேலைவாய்பு தொடர்பிலும் போதிய முன்னேற்றமின்றியும் இந்த அரசு ஆமை வேகத்தில் நகர்கின்றது.
எமது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வரலாறு காணாத அபிவிருத்தி திட்டங்களையும் தொழில்வாய்பினையும் வழங்கி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் மனிதராக திகழ்தார்.
இவரது ஆட்சிக் காலத்தில் பாகுபாடின்றி முழு இலங்கையையும் ஒன்றாகவே பார்த்து அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டார். அதே போன்று பாகுபாடின்றி தொழில்வாய்பினை வழங்கினார். தொழில்வாய்ப்பு வழங்குவதில் உரிய மாவட்ட மக்களை உரிய மாவட்டத்திலுள்ள திணைக்களங்களுக்கு நியமனங்களை வழங்கினார். இந்த அரசாங்கத்தைப்போல் பொலனறுவையைச் சேர்ந்த தொழிலாளர்களை மட்டக்களப்பிலுள்ள அரச திணைக்களங்களுக்கு குவிக்கவில்லை. தற்போது எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்விகற்று தொழிலை எதிர்பார்த்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இருக்கும்போது, இங்கு வேறு மாவட்டத்திலிருந்து மிக அதிகமானோர் அரச திணைக்களங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி விடயங்களையெல்லாம் கவனத்தில் கொண்டு எதிர்வரும் தேர்தல்களில் நாம் தனித்துப் போட்டியிட்டு தமிழ் மக்களுக்கு பல வழிகளிலும் பயன் தரக்கூடிய ஒரு பலமான உடன்படிக்கையுடன் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளோம். என அவர் தெரிவித்தார்.