[Photos: NR]மட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் கலாசார விழா 2017 நிகழ்வானது 12.05.2017 வெள்ளிக்கிழமை இன்றைய தினம் உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் திரு.எஸ்.ஜெயபாலன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் கல்வி பயிலும் கணக்கியல் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா, உயர்தேசிய தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவம் பாடநெறி மாணவர்கள் இவ் விழாவினை வெகு சிறப்பாகவும், விமர்சியாகவும், மங்களகரமாகவும் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
இவ் விழாவில் பிரதம அதிதியாக, ஆரையம்பதி மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி. எல்.பிரசாந்தன் , மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டல் உரிமையாளரும் வர்த்தக சங்கத்தின் தலைவரும், தமிழ் சங்கத்தின் உபதலைவருமான திரு.எம். செல்வராசா, மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திரு. வி. நவிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு கே.குணநாயகம், மற்றும் உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ் கலாசார விழாவின் போது சித்திரை புத்தாண்டின் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.




















































