கதிரவெளியில் ஒரு தேங்காயில் ஐந்து தென்னங்கன்றுகள்

(கோபி) வாகரை கதிரவெளி கிராம சேவகர் பிரிவில் புதூர் கிராமத்தில் வசிக்கும் மாரிமுத்து ராமலிங்கம் என்பவர் தென்னை நடுகைக்காக தேங்காய்களை பதியம் வைத்து பராமரித்து வந்த வேளையில் ஒரு தேங்காய் நாற்றில் இருந்து அதிசயிக்க தக்க வகையில் ஐந்து தென்னங்கன்றுகள் வெளி வந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

கிராமத்திலுள்ள பொதுமக்கள் பலரும் வருகைதந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.