கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கான புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்கள் கௌரவ ஜனாதிபதியால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
இலங்கையில் இருக்கக் கூடிய அதியுன்னதமான கல்விசார் கௌரவ பதவியாக பார்கப்படுகின்ற பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்கள் மட்டுநகர் சிவாநந்தாவின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி தெ.சுந்தரேசன் தலைமையில் கடந்த 13.05.2017 அன்று, இரவு நேர விருது விழாவாக சிவாநந்தாவில் இடம்பெற்ற நிகழ்வில் இராமகிருஷண மிஷன் சுவாமிகள் மற்றும் பழைய மாணவர்கள் மத்தியில் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்கள் கௌரவிக்கப்பட்டார்
ஆன்மீகம் கலந்த கல்வியால் சர்வதேச அளவில் பலதரப்பட்ட துறைகளிலும் வல்லுனர்கள் மற்றும் சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் சிவாநந்தா எனும் மண்ணிற்கு தனித்துவமும் மகத்துவமும் உள்ளது.
கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கான வேந்தராக பதவியேற்றுள்ள வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களும் அந்த வரிசையில் இணைந்து பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்கள் திருப்பழுகாமம் எனும் பாரம்பரியக் கிராமத்தில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயம்.












