மட்டக்களப்பு, புன்னைச்சோலை கோப்ரா விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு நிகழ்வும் பாராட்டு விழாவும்

மட்டக்களப்பு - புன்னைச்சோலை கோப்ரா  விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு விழாவும் பாராட்டு நிகழ்வும்  நேற்று 30ம் திகதி புன்னைச்சோலையில்  நடைபெற்றது.

இவ் விளையாட்டு விழா புன்னைச்சோலை C.T.S  விளையாட்டு மைதானத்தில் "கோப்ரா"  விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில்  புன்னைச்சோலை ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிருவாகத்தின் தலைவர் சி.ஞானப்பு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந் நிகழ்வு பல வருடங்களாக வருடா வருடம் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி நடாத்தப்பட்டு வருகின்றது. இதன்போது விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் கல்வியில் சாதனைபடைத்த மாணவர்கள் பாராட்டப்பட்டு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.