மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்களை முந்தனை ஆற்றுடன் இணைப்பதன் ஊடாக விவசாயச் செய்கையை அதிகரிக்கலாம் என நீர்ப்பாசனத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்கா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் செய்த பிரதியமைச்சர், மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘உன்னிச்சை, உறுகாமம், நவகிரி போன்ற குளங்களின் நீரினை வீணாக்காது முந்தனை ஆற்றுடன் இணைப்பதனூடாக அனைத்து பிரதேசங்களுக்குமான நீர்ப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதுடன், சீரான நீர்விநியோகத்தினையும் மேற்கொள்ளமுடியும்.
முறையான திட்டமிடல்களின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசன முறைகளை ஒழுங்குபடுத்தினால், இப்பிரதேசத்தின் நெற்செய்கையினை மேலும் மேம்படுத்தவும் முடியும்” என பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.