காணி அபகரிப்பு செய்து, சட்ட விரோதமாக கிறிஸ்தவ கட்டடம் கட்டும் போதகர்


மட்டக்களப்பு சத்துகொண்டான்  கும்பிளாமடுவில் உள்ள  ஹோப்  வில்லேஜ் ( Hope village )  கிறிஸ்தவ  போதகர் ஒருவர் தனியார் ஒருவரின் காணியின்  ஒரு பகுதியை  அபகரிப்பு செய்து சட்ட விரோதமாக   கிறிஸ்தவ  கட்டடம்  ஒன்றை கட்டி வருகிறார் .
சம்பவ  இடத்தை  பொலிசாரும்  சென்று  பார்த்துள்ளனர் .
இது தொடர்பில்  மாநகர சபை கடிதம் அனுப்பியும், நிறுத்த சொல்லியும்   அந்த  கட்டடம்  கட்டப்பட்டு  வருகின்றது.

இக் கட்டிடத்திற்கான  அத்திவாரம்  போடப்பட்ட நிலையில் இருந்த போது காணி  உரிமையாளர்   தனது காணியினுள் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது  என முறைப்பாடு செய்துள்ளார் , அதை தொடர்ந்து  மாநகர சபை எங்கள்  அனுமதி இல்லாமல் கட்டடம்  மேலும் கட்டக்கூடாது  என கூறியும்  நடவடிக்கை எடுக்க   கடிதங்களும் அனுப்பியுள்ளது,
அதற்கு  போதகர்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாநகர சபையின்  இறுதி  நினைவூட்டல்  கடிதத்திலும்  குறிப்பிடப்பட்டுள்ளது,
  இப்பொழுது அந்த  கட்டடம் கட்டுப்பட்டு வருகின்றது ,
காணி உரிமையாளர் இது தொடர்பில் போதகருடன் கதைக்கும் போது  மதம் சார்பாக வாய் தர்கத்தில் போதகர் ஈடுபடுவதாக  கூறுகின்றார் .

காணி அபகரிப்பு செய்து   கட்டடம் கட்டும்   அந்த போதகருக்கு  எதிராக இதுவரை  எந்த வித நடவடிக்கையும் அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை.

இதற்கு மாநகர  சபை நடவடிக்கை எடுக்குமா ????

 .