முதன்முறையாக மட்டக்களப்பில் தாதியர் நூலகம் திறப்பு

ஜே.;கான்--
மிக நீண்டகாலத் தேவையாகவிருந்த தாதியர்களுக்கான தனியான நூலகம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.சர்வதேச தாதியர் தினத்தையொட்டி பல இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கபட்ட இந்நூலகத்தை வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாராணி கணேசலிங்கம்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நேற்று (13)திறந்து வைத்தார்.

கடந்த 2002ம் ஆண்டு முதல் தாதியர்களுககான தனியான நூலகம் தொடர்பாக பல முறை தாதியர் சங்கத்தினால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தபோதிலும் அவை தொடர்சசியாக நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.15 வருடங்களின் பின்னர் தற்போதைய பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெப்பையின் முயற்சியனால் இந்நூலகம் அமைக்கப்படதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர் நலன்புரி சங்கத்தின்  தலைவர் பூபாலப்பிள்ளை புஸ்பராசா தெரிவித்தார்.

நவனீ வசதிகளுடன் குளிரூட்பட்ட இந்நூலகத்திற்கு பெறுமதியான நூல்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.தாதியர்தினக் கொண்டாட்டங்களும் இவ்வைபவத்தின்போது இடம்பெற்றன.வைத்தியசாலை அதிகாரிகள் தாதியர் நலன்புhசி சங்க செயலாளர் ஆர்.ஜெயகரன் பிரதம தாதிய உத்தியோகத்தர் நாகலிங்கம் கனகராசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.