திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தினால் கொண்டாடப்பட்ட தமிழ் சிங்களப் புத்தாண்டு



தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் கல்வி வலய அலுவலகத்தினால்
மதங்களுக்கிடையிலும் கலாசாரங்களுக்கிடையிலுமான விழாக்களைக் கூட்டாகக் கொண்டாடும் தமிழ் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்ட   நிகழ்வானது இன்று (17) தம்பிலுவில்  மத்திய மகா வித்தியாலயம் தேசிய  பாடசாலையில்  நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நான்கு மதங்களையும் உடைய மதப்பெரியார்கள்  கலந்து கொண்டனர் . 
மாணவர்களின்  விளையாட்டு , நடனம் மற்றும்  பல்வேறு நிகழ்வுகளும்  இடம்பெற்றது .

இந்த  நிகழ்வில்  வலய கல்வி பணிப்பாளர் ,  பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துக்கொண்டனர்.