இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராசசிங்கம் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராசசிங்கம், கௌரவ அதிதிகளாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி றொகான் விஜேகோண், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன்,மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம். ஹுஸைன், கிழக்கு பல்கலைகழக விவசாய பீட பீடாதிபதி கலாநிதி பி.சிவராஜா, மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
கரடியனாறு விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பிரிவின் மாவடியோடை பிரதேசத்தில் ஆற்றுப்பக்கைகளை அண்டிய மானாவாரி நெற் காணிகளில் மேற்படி நிலக்கடலை செய்கையானது ஆரம்ப காலத்தில் ஓரிரண்டு ஏக்கருடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலுடன், கடந்த 2009ஆம் ஆண்டுகளில் 8ஏக்கராக அதிகரிக்கப்பட்டு செய்கை பண்ணப்பட்டுவந்த நிலையில் அந் நடவடிக்கை 2010- 20 ஏக்கராகவும், 2011- 50 ஏக்கராகவும். 2012இல் 70 ஏக்கராக அதிகரிக்கப்பட்டு பின்னர் 2013இல் 100 ஏக்கரும், 2014இல் 200 ஏக்கரும், 2015இல்300 ஏக்கரும், 2016இல் 500 ஏக்கரும் 2017இல் 700 ஏக்கருமாக படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு சிறந்த முறையில் விரிவகக்கமடைந்து செய்கைபண்ணப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா மற்றும் இப் பிரதேச விவசாய போதனாசிரியர்களான கே.லிங்கேஸ்வரன் வீ.இளமாறன் போன்றோர் தெரிவித்தனர்.
ஆற்று நீர் பாசனத்துடன் மட்டக்களப்பு விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் செய்கை பண்ணப்பட்டுவரும் இந் நிலக்கடலை பயிர் செய்கையுடன் வத்தவை பழம், எள்ளு போன்ற பயிர் வகைகளையும் உற்பத்தி செய்து அதிக இலாபமடைந்து வருவதாக விவசாயிகள் இதன்போது தெரிவித்தனர்.
இப் பிரதேச மக்கள் நெற்செய்கை மட்டுமல்லாமல் மாற்றுப் பயிர் செய்கை திட்டங்களின் மூலம் நிலக்கடலை, வத்தவை, எள்ளு போன்ற பயிரினங்களை செய்து ஒரு விவசாய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு உறுதுணையாக விவசாயத் திணைக்கள அதிகாரிகள் இருந்து பெரும் பங்கு வகித்துள்ளனர்.
இவர்களின் இந்த நிலக்கடலை செய்கை எமது நாட்டின் தேசிய விவசாய உற்பத்திக்கு பங்கு வகித்துள்ளது. இவர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த காலங்களில் உதவியதைப் போன்று, எமது விவசாய அமைச்சும், திணைக்களமும் தொடர்ந்தும் கண்காணிப்புடன் உதவும் என மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராசசிங்கம் தெரிவித்தார்.












