வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு ! ஜுன் 8 - 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளது

பல்கலைக்கழக வர்த்தக பிரிவு மாணவர்களால் வழிநடத்தப்பட்டு வருகின்ற கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் (Education Motivating Association. - EMA) 2017 ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கின்ற வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு பாடசாலைகள்  ரீதியில் முன்மாதிரி பரீட்சைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பரீட்சை வினாத்தாள்களுக்கான இலவச கருத்தரங்கும் தற்ப்போது தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றது..

இந்த இலவச கருத்தரங்கானது மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியில் ஜுன் மாதம் 8ம் திகதி முதல் 9ம் திகதி 10ம் திகதி மற்றும் 11ம் திகதி வரை இடம்பெற உள்ளது.. 

அனைத்து வர்த்தக பிரிவு மாணவர்களும் இவ் இலவச கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்...