மட்டக்களப்பில் இயங்கிவரும் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்று சகல அனுமதியோடும் மட்டக்களப்பு நகரில் இயங்கி வருகிறது.
எனினும்,இந்த வைத்தியசாலையின் இட பற்றாக்குறையினால் பழைய வாடிவீட்டு வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கும் வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளையில் இந்த வீடானது வைத்தியசேவைக்கு ஏற்றால் போல் அமையவில்லை எனவும் இந்த வீட்டில் வைத்தியசேவை செய்வதற்குரிய முறையான எந்தவொரு அனுமதியையும் இந்த வைத்தியசாலை நிர்வாகிகள் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் மேலும் இந்த வைத்தியசாலை கழிவுகளால் பிளாஸ்டிக் பொருட்கள்,இரத்தம் தோய்ந்த பஞ்சுகள்,திரவ கழிவுகள் மற்றும் ஏனைய மருத்துவ கழிவுகளை இந்த அனுமதி பெறாத வீட்டு வளவுக்குள்ளும் வீதிகளிலும் வீசுவதாலும் கழிவு பொருட்களை வளவின் பின்பகுதியில் போட்டு எரிப்பதாலும் இந்த அனுமதி பெறாத வீட்டை சுற்றியுள்ளவர்கள் பல சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவதாக அந்த பகுதியில் குடியிருக்கும் அனைவரும் உரிய இடங்களில் முறைப்பாட்டை செய்துள்ளார்கள்.
ஆனால் இதுவரை முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இதுவரை எதுவிதமான நடவடிக்கையும் எடுக்காமலும் வெறும் கடித்த தொடர்புகளை மட்டும் பேணிக்கொண்டு வருகிறார்கள் என முறைப்பாட்டை செய்த பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையை நிர்வகிப்பவர்கள் சமூகத்தில் உயர் பதவிகளை வகிப்பதாலும் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதாலும் இந்த முறைப்பாடுகள் கிடப்பிலே கிடக்க வைக்கப்பட்டுள்ளதா? அல்லது அதற்குரிய உரிய ஆவணங்கள் முறைப்பாடு செய்தவர்களுக்கு தெரியாமல் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டு விட்டதா ?
அதிகாரம் மற்றும் செல்வாக்கு இருந்தால் எந்த செயலையும் சட்டத்துக்கு புறம்பாக மக்களுக்கு பாதகமான முறையில் செயல்படுத்த முடியுமா என்ற கேள்வியோடு முறைப்பாட்டை கொடுத்தவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கழிவுகளாலும் மருத்துவ கழிவு எரிவூட்டும் புகையினாலும் தொடந்தும் சுகாதார பிரச்னையை எதிர்கொண்டவண்ணம் உள்ளதாக முறைப்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர் .