கிழக்கு மாகாணத்தில் சிறந்த முதல் தர வங்கியாக சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை


(துறையூர் தாஸன்)

இலங்கை வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான வங்கியின் செயற்பாடுகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி கொழும்பு ரத்மலானை ஸ்ரெயின் ஸ்ரூடியோவில் கோலாகலமாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில்,கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்துக்கான விருதினையும் தேசிய ரீதியில் ஆறாம்  இடத்தினையும் சம்மாந்துறை இலங்கை வங்கிக் கிளை தட்டிக் கொண்டது.இவ்விருதினை  இலங்கை வங்கியின் கடன் அறவிடல் பிரிவின் பிரதி முகாமையாளர் W.A.C திஸ்ஸேராவிடமிருந்து சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை முகாமையாளர் ஆர். தவராசா பெற்றக் கொண்டார்.

இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணத்துக்கான உதவி பொது முகாமையாளர் திரு.D.M.K.S திசாநாயக்க, செயற்பாட்டு முகாமையாளர் W.M.U அத்தனபொல, அம்பாரை மாவட்ட முகாமையாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.