ஏறாவூர் – வந்தாறுமூலை உப்போடைப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான கே. குமாரசாமி என்ற விவசாயியே யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் உப்போடைப் பிரதேசத்திலுள்ள வயலில் இருந்து வந்தாறுமூலை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இடைவழியில் குறிக்கிட்ட காட்டு யானை குறித்த நபரைத் தாக்கியுள்ளது.
இந்நிலையில் அவ்விடத்தில் காயங்களோடு வீழ்ந்து கிடந்தவரை அவதானித்த அப்பிரதேச மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.