மட்டக்களப்பு புதுநகர் ஸ்ரீ சித்தி வினாயகரின் தேரோட்டம் - வீடியோ



மட்டக்களப்பு புதுநகர் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சித்தி வினாயகரின் தேரோட்டம் வியாழக்கிழமை 29ஆம் திகதி மாலை (7.00 மணியளவில் ) வெகு விமர்சையாக நடைபெற்றது.

உற்சவகால பிரதம குரு  சிவாச்சாரியார் சிவஸ்ரீ ஹனேந்திரக் குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ். சபாரெத்தினம் குருக்கள் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து ஸ்ரீ சித்தி வினாயகரின் தேரோட்டம் இடம்பெற்றது.


ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலய முன்றலில் ஆரம்பமான தேரோட்டம் திமிலைதீவு கிருஸ்ணன் ஆலயம் மற்றும் சேற்றுக்குடா வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இவ் வைபவத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேரினை இழுத்துச் சென்றமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.