மிதிவெடிகள் அபாயக் குறைப்பு மாவட்டமாக மட்டக்களப்பு - பிரகடனப்படுத்தும் முதல் நிகழ்வு

(சதீஸ்)

மிதிவெடிகள் அபாயக் குறைப்பை அண்மித்த மாவட்டத்தை பிரகடனப்படுத்தும் முதல் நிகழ்வு புதன்கிழமை 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது.

மிதிவெடிகள் அபாயக் குறைப்பை அண்மித்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் என இதன்போது அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, லண்டன் மற்றும் இலங்கை பேன்ற நாடுகளின் பொறுப்புமிக்க பிரதிநிதிகள் இணைந்து இதனை தெரிவித்தனர்.

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு லங்கா விடுதி வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது மெக் நிறுவனத்தினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிலக் கண்ணிவெடி அபாயம் பற்றியும் அவடிபொருட்களை எவ்வாறு மீட்பது என்பது பற்றியும் செயல்முறையில் காட்டினர்.

 இதில் விசேடமாக அமெரிக்காவைச் சேர்ந்த கப்டன் அல்வின் எனும் இராணுவ நாயினால் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மிதிவெடி மீட்கும் நடவடிக்கை மிகவும் ஆச்சரியமானதொன்றாக அமைந்திருந்தது.

இந் நிகழ்வுகளில் அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் மற்றும் அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா நாட்டு பிரதிநிதிகள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.