முச்சக்கரவண்டியை செலுத்துதல் தொடர்பில், பின்பற்றவேண்டிய சட்டத்திட்டங்கள் குறித்து, பயற்சி செயலமர்வு வழங்கப்பட்டதன் பின்னரே, எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரித்தார்.
குருநாகலில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை ஆகியன இணைந்தே, இந்த வேலைத்திட்டத்தை தயார் செய்துள்ளன.
முச்சக்கரவண்டிக்கான சாரதி அனுமதிப்பத்திரத்திரம் கோரி, விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 200 சேர்ந்தவுடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தில் ஏழுநாள், பயிற்சி செயலமர்வு நடத்தப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.