மட்டக்களப்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் இரத்தினபுரி மக்களுக்கு வழங்கப்பட்டது.



சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கெ மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் இரத்தினபுர மாவட்டத்தின் கலாவன பிரதேச செயலாளர் பிரிவு மக்களுக்காக கையளிக்கப்பட்டது.

 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனைக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், திணைக்களங்கள் தலைவர்களது ஒத்துழைப்புடன் இப்பொருள்கள் சேகரிக்கப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களைச் சேகரிப்பதற்கான நிலையம் மட்டக்களப்பு காந்திப் பூங்காலில் ஏற்பட்டுத்தப்பட்டு பொருள்கள் சேகரிக்கப்பட்டன.


 இந்தப் பொருள்கள் 3 லொறிகளில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டு இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட அவரது அறிவுறுத்தலுக்கமைய அம் மாவட்டத்தின் கலாவனை பிரதேச செயலாளரிடம் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட திவிநெகுமத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் எம்.குணரெட்ணம், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா, மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் உத்தியோகத்தர்களால் கையளிக்கப்பட்டது.

 இந்தப் பொருள் தொகுதியில் குடிநீர், ரின் மீன், சோயா மீற், நூடில்ஸ், பிஸ்கட், மருந்துப் பொருள்கள், அரிசி, அரிசிமா, பருப்பு, சீனி, தேயிலை, பாடசாலை உபகரணங்கள், போர்வைகள், துவாய்கள், பால்மா, குழந்தைகளுக்கான பால்மா, குழந்தைகளுக்கான பொருள்கள், என 71 வகையான பொருள்கள் அடங்கியிருந்தன.

 மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலாளர் பிரிவுகளினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களின் ஒருதொகுதி ஏற்கனவே அனர்த்தம்ம ஏற்பட்டு இரண்டு தினங்களில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் ஊடாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள இன்னல்களிளை ஓரளவுக்கேனும் தணிக்கும் வகையில் இந்த நிவாரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.