மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க கலந்துகொண்டு போட்டியினை ஆரம்பித்துவைத்தார்.
அணிக்கு ஏழு பேர் கொண்ட, 24ஆம், 25ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் கொண்டதாக நடைபெறும் இப்போட்டியில், மட்டக்களப்பு மாவட்ட அணி, திருகோணமலை மாவட்ட அணி, கடற்படை, விமானப்படை, பொலிஸ், சப்ரகமுவ பல்கலைக்கழகம், இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட ஏழு அணிகள் இப் போட்டியில் பங்குபற்றின.
இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு நகர் காந்திப் பூங்க முன்னால் ஆரம்பமாகி ஊர்வலமாக வெபர் மைதானத்தை வந்தடைந்தபின் அங்கு நடைபெற்ற ஏனைய நிகழ்வுகளைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமானது.
இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், விசேட அதிதிகளாகஇ மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜே. ஜாகொட ஆராச்சி, இலங்கை விமானப்படை வினங் கொமாண்டர் வீ.ஜி.ஜி.வி.பியசிறி, மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி எஸ்.பி.நிவுன்கெல, மட்டக்களப்பு மாவட்ட கடற்படை தளபதி ஜி.ஆர்.ஜி. குணரத்ன, சமூக பொலிஸ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரெட்ணம் மற்றும் கௌரவ அதிதிகளாக வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், இலங்கை கொக்கி சம்மேளனத்தின் பிரதித் தலைவர் பி.விஸ்வநாதன், கிழக்கு மாகாண பொலிஸ் சேவை ஆணைக்குழு பணிப்பாளர் ஏ.ரவீந்திரன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.












