சைற்றம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகள் ஜனநாயக வழிப்போராட்ட வடிவிலிருந்து விலகி வன்முறைக் கலாசாரத்தின் பக்கம் திரும்பி இருப்பதையே சுகாதார அமைச்சு வளாகப் பகுதி சம்பவங்கள் வெளிப்படுத்திக்காட்டியுள்ளது.
தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் வேண்டுமா, இல்லையா? என்பது வேறு விடயம். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இது விடயத்தில் மேற்கொண்டு வந்த போராட்டங்கள் குறித்து சம நிலையில் வைத்தே அவதானித்து வந்தோம்.
ஜனநாயக வழியில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதே வரவேற்கத்தக்கது என்பதை இரு தரப்பினருக்கும் அறிவுரையாக வழங்கப்பட்டு வந்தது. தொழிற்சங்க நடவடிக்கைகள், போராட்டங்ளை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அது அவர்களது நியாயமான போராட்டம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் நேற்று முன்தினம் வைத்தியர்கள் மேற்கொண்ட செயற்பாடுகள் ஜனநாயக வழிப் போராட்ட முயற்சிகளுக்கு ஆரோக்கியமானதாகக் கொள்ள முடியாது.
வியாழக்கிழமை வேலை நிறுத்தம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவ மாணவர்களின் செயற்பாடுகள் முடங்கிப் போயிருந்தன. இதன் விளைவாக அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகள் பெரும் அவதி நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தனர்.
புதன்கிழமை சுகாதார அமைச்சு வளாகத்தில் சைற்றம் நிறுவனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவத்துறை மாணவர்கள், தமது போராட்ட வியூகத்தை திசை மாற்றி, சுகாதார அமைச்சுக்குள் நுழைந்து தமது அடாவடித்தனத்தை, மிலேச்சத்தனத்தை வெளிக்காட்டினர்.
இதன் காரணமாக சேதமாக்கப்பட்ட சொத்து விபரங்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறாரர். அத்துடன் அத்து மீறி அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
அரச மருத்துவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நியாயமானதா,அநாவசியமானதா? என்பது குறித்து நாம் ஆராய முற்படவில்லை. நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள அப்பாவி நோயாளர்கள் குறித்து சிந்தித்து பார்க்குமாறுதான் கேட்கின்றோம். இன்று நாட்டில் டெங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவமனைகள் இரவு பகல் பாராது தமது பணிகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயக் கடப்பாட்டுக்குள் இருக்கின்றன.
அவ்வாறான சூழ்நிலையில் ஒரு சைற்றம் விவகாரத்தை வைத்துக் கொண்டு அப்பாவி நோயாளர்களின் உயிரோடு விளையாட முற்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவர்களது தொழிற்சங்க உரிமை போராட்டத்தை எந்தவிதத்திலும் கொச்சைப்படுத்தும் எண்ணமும் எமக்குக் கிடையாது.
இந்த விவகாரத்தை ஜனநாயக வழியில் நியாயமான விதத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதே சரியான வழிமுறையாகும். இது விடயத்தில் விட்டுக் கொடுப்பு மிக முக்கியமானதாகும்.
அதேசமயம் சைற்றம் பல்கலைக்கழக விடயத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீதித்துறையின் பணிப்புரைக்கு சவால் விடுவதாக டாக்டர்களின் செயற்பாடுகள் மாறுவதை அனுமதிக்க முடியாது. அரச மருத்துவர்கள் பலாத்காரத்தையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட முயற்சித்தால் பாதாள உலகத்தினருக்கும், வன்முறையாளர்களுக்கும், இவர்களுக்குமிடையே வித்தியாசம் காண முடியாது போகும்.
நாட்டு மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டிய டாக்டர்கள், வைத்தியத்துறை சார் ஊழியர்கள் மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்து போராடுவது தர்மமாக முடியுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த விடயத்தில் அரசாங்கமும் தீர்க்கமான முடிவை எடுத்து தீர்வொன்றைக் காண முன்வர வேண்டும். அதனை விடுத்து இருதரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக நின்று இழுபறிப்பட்டால் பாதிக்கப்படுவது எமது அப்பாவி நோயாளிகளே. அதற்கு எவராலும் அனுமதிக்க முடியாது. சட்டம், நியாயம் என்பதற்கப்பால் மனிதாபிமான அடிப்படையில் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
அரச மருத்துவர்கள் சங்கம் அதன் உறுப்பினர்களையும், மருத்துவ மாணவர்களையும் தூண்டி போராட்ட வடிவத்தை வேறு திசைக்குத் திருப்பியதன் மூலம் வன்முறைக் கலாசாரத்தின் பக்கம் அவர்கள் ஏவி விடப்பட்டுள்ளதையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அரசாங்கம் இவ்விவகாரத்தை நியாயமான முறையில் கையாள முற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மருத்துவர் சங்கம் தங்களது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வர மறுத்து வருவது நியாயமானதொன்றாக கருத முடியாது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனித்துச் செயற்படுவதாகக் கூற முடியாதுள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் இதே மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல்வேறுபட்ட ஜனநாயக போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் அவை சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி தீர்வு காணப்பட்டே வந்துள்ளன.
ஆனால் இந்த சைற்றம் விவகாரத்தின் பின்னணியில் பெரும் அரசியல் சக்தியொன்று இயங்குவதாக அரசு சந்தேகம் கொண்டுள்ளது. அரசு இயந்திரத்தை செயலிழக்கச் செய்யும் ஒரு பாரிய முயற்சிக்கு சைற்றம் விவகாரத்தை அத்திவாரமாகப் பயன்படுத்துதே அரசியல் சக்தியின் நோக்கமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் புதன்கிழமை மேற்கொண்ட அராஜகத்தனமான வன்முறைக் கலாசாரம் இனியொரு போதும் இடம்பெறாதவாறு கவனத்தில் கொள்ள வேண்டும். ஜனநாயக வழி மூலமே தீர்வு காண முற்பட வேண்டும். வன்முறை எந்த விடயத்துக்கும் தீர்வாக அமைய மாட்டாது.
இதனை மனதில் பதிய வைத்து நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலையாதிருக்கும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஜனநாயக வழிப்போராட்டத்துக்கும் வன்முறைக் கலாசாரத்துக்கும் நிறையவே வேறுபாடுண்டு என்பதை மறந்து விடாமலிருப்பதே முக்கியமானதாகும் என்பதைக் கூறி வைக்கின்றோம்