(அரசையூர் சு.சிறிகரன்)
பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம் பல வரலாற்று பெருமையும் சிறப்பும் தன்னகத்தே கொண்டது. மண்முனையில் குடியேறிய ஏழு குடி மக்களுள் சிலர் முதலாவதாக குடிபுகுந்த வரலாறும் பாரம்பரியமும் கொண்ட பூர்வீக பூமியே பண்டாரியாவெளி (பண்டையூர்) என்னும் தமிழ்-சைவ கிராமமாகும்.
கதிர் சென்னல் கனகம் என பண்ணிசைக்க
வற்றாத நதி வளைந்து வல்லமையை கால்கழுவ
பண்டு முறை மன்னர்புகழ் பண்டாரியாவெளி பதியில் உறை
எங்கள் திருவுருவான தாய் நாகசக்தி..
மட்டக்களப்பு நகருக்கு தென் மேற்கே ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் எங்கள் தனக்குவமை இல்லாத அந்த தான்தோன்றி அப்பனின் சந்நிதி இதன் வடக்கே இரண்டு கிலோமிட்டர் தொலைவில் வில்குள அருவிபாய நெல்லினம் சூழ்ந்து ஆட வண்டினம் வாழ்த்துபாடி வந்தாரை வாழவைக்கும் எழில்மிகு பண்டாரியாவெளி எனும் அழகிய கிராமத்தின் அருகே அமைத்துள்ளது.
படுவான் தமிழகத்தின் மையபகுதியாக விளங்கும் பண்டாரியாவெளி கண்ணே ஆண்டாண்டு காலம் அடியாரின் அல்லல்கள் நீக்கி அருள்பாலிக்கும் ஆதிநாதராம் எங்கள் நாகத்தாய்.
அருளுக்கு வித்தாகி ஆனந்தம் பொங்குமிடம்
அற்புதங்கள் பல காட்டி தெய்வீகம் வாழுமிடம்
உருவாக்கும் இறையோன் உலகமெல்லாம் நிறையுமிடம்
ஓங்கார மெய்பொருளாய் தன்குறவே தங்குமிடம்
நாகவடிவாக வந்து நலம் காட்டி எமை ஆழ
நாகம்மை கோவில் கொண்ட தேன்காமலளும் திருவிடமாம்
எங்கள் கண்கண்ட தெய்வமான
மண்கொண்ட நாகசக்தி...
1812 ஆம் ஆண்டு முதல் பண்டாரியாவெளி மக்களால் காடுவெட்டி வேர் பிடுங்கி ஆனந்த நாதரின் பத்து அடி உயரமும் பன்ணீரெண்டு அடி சுற்றும் கொண்ட ஒரு உயர்ந்த புற்றை பராமரித்து வந்தனர். இப் புற்றின் நடுவே வேம்பு மற்றும் இத்தி மரங்கள் அமையபெற்று உள்ளது. இத்தி மரம் சிவனையும் வேம்பு சக்தியையும் குறிப்பதாக அமைவது விசேட அம்சமாகும். இந்த உயர்ந்த புற்றில்தான் நாகம்மையுடன் பிறந்த நாகம் புற்றுறைத்து படமாடி பால்பழம் வைத்து வழிபட ஆரம்பித்தனர் எமது முன்னோர். மண்முனையில் குடியேறிய ஒரு கலிங்க குல பெண்ணுக்கு ஐந்து பிள்ளையும் ஐந்தாவது பெண் குழந்தையுடன் (நாகம்மை) ஒரு சஸ்திரிய வம்ச நாகமும் உடன் பிறந்து வாழ்த்து வரும்போது தங்கள் தாயாதி சொத்துக்களை பங்கிடும்போது நாகத்துக்கும் ஒரு பங்கிடாமையால் எழுந்த வாக்குவாதத்தால் நாகம் சினம் அடைந்து அம்மையுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்று சொல்லப்படும் மண்முனை இறால் வளப்பு கட்டுக்குடாகக் (அன்றைய சேவகபற்று) இந்த பாரிய புற்றில் தான் நாகம் குடிபுகுந்து இன்று அறிய பல தெய்வீக அதிசயங்களை நிகழ்த்துகிறாள் இந்த அண்ட சராசரங்களையும் ஆளும் நாகசக்தி.
வாழ்கின்ற நன் நாளில் வளமான சீதனத்தை குழந்தைக்கீர்ந்து
நகர்ந்து வெளி சென்றதனால் தெய்வமாகி
பண்டாரியார் சூள்திலங்கி ஆட்சி செய்தார்
ஆண்டுகள் வருகின்ற உத்தரமாமம் ஆனி தன்னில்
எடுக்கின்றோம் பொங்கல் உந்தனக்கு பால்பழங்கள் வைத்து குறிப்பாக நாகத்துக்கு பால்பழம் மற்றும் முட்டை வைத்து வழிபாடுகள் மிக எளிமையான முறையில் இடம் பெறுகின்றது. ஆனியுத்தர தரிசன நாள்களில் பால்பழம் வைக்கும் நிகழ்வு மிக பிரதானமான கைங்கரியமாக அடியார்களால் கொண்டாடப்படுகின்றது ஆனியுத்தர தரிசனத்தில் பல பாகங்களிலும் இருந்து நாகங்கள் பால் பழம் உண்பதை அடியார்களால் காணமுடிகின்றது. பிரதான புற்றில் வாழும் நாகங்கள் இவ் ஆலயத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான காஞ்சரிகை மரத்திலும் வாழ்ந்துவருகின்றன.
இக்கோயின் பல நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் கலையம்சம் பொருந்திய சிலைகளும் கட்சிதமான முறையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஆலய கற்பகிரகத்தில் நாகம்மையுடன் நாகம் எவ்வாறு இவ் ஆலயத்தை வந்தடைந்தது என்பன பற்றியும் அலங்கார மண்டபம் மற்றும் கிழக்கு வாசல் என்பவற்றில் விஷ்ணு சிவபிரான் போன்றோரின் ஐதீக புராண காட்சிகள் சித்தரிக்கபட்டுள்ளன.