அரசியலில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் தவறுகளைச் செய்யக்கூடாது என பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
நேற்று (சனிக்கிழமை) கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சம் தமிழ் வாக்குகளில், தமிழ்க் கட்சிகள் 1 இலட்சம் வாக்குகள் வரைதான் பெற்றன. சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.
சுமார் 25 ஆயிரம் வாக்குகளை ஐக்கிய தேசியக்கட்சிக்கு அளித்திருந்தால் இம்மாவட்டத்தில் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வந்திருப்பார். அவரொரு பிரதியமைச்சராகவோ அமைச்சராகவோ வந்து பாரிய அபிவிருத்திகளைச் செய்திருப்பார். எனவேதான் அரசியலில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் தவறுகளைச் செய்யக்கூடாது.
அதற்காக எல்லாவற்றையும் இழக்காமல் சமகாலத்தில் அரசியலில் எதைச்செய்ய முடியுமோ அதனைச் செய்கின்றபோதுதான் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகம் எதனையாவது அடையமுடியும்” என பிரதியமைச்சர் அமீர் அலி மேலும் தெரிவித்தார்.