தமிழ்தின போட்டியில் பட்டிருப்பு மாணவி தேசிய மட்டப் போட்டியில் 2ம் இடம்

(ரவிப்ரியா)

மட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசியபாடசாலை களுவாஞ்சிக்குடியில் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவி விஸ்வலிங்கம் குவினா தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ்தின போட்டியில், 4ம் பிரிவு பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

 கிழக்கு மாகாண மட்டப் போட்டியில் இவர் முதலாம் இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.