ஊழல் மோசடி மற்றும் மனிதக் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்பதால் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பண மோசடியில் ஈடுபட்டவர்களையும், திருட்டுப் பணத்தில் தாய் தந்தையருக்கு சமாதி அமைத்தவர்களையும், மனித கொலையுடன் தொடர்பு பட்டவர்கள் மீதும் வழக்குத் தொடரவேண்டும்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்யவுள்ளதாக கூறப்படுவது தவறான விடயமல்ல. தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே” என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.













