மட்டக்களப்பு - வாகனேரி பிரதேசத்தில் 13 வயது சிறுமியின் கழுத்தில் முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர் கத்தியை வைத்து அவரை கடத்திச் சென்று பாலியல் துஷபிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்த முயற்சித்த போது அந்த பெண் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை வாகனேரி பிரதேசத்தில் நேற்றிரவு ஆலய உற்சவத்திற்கு குறித்த சிறுமி அவரது சகோதரி அவரது கணவன் ஆகியோருடன் சென்று நள்ளிரவு வீடுதிரும்பிய நிலையில் வீட்டின் கதவை பூட்டாது நித்திரைக்கு சென்றுள்ளனர்.
அந்தவேளை அதிகாலை 2 மணியளவில் குறித்த வீட்டிற்குள் முகத்தை மூடியவாறு இளைஞர் ஒருவர் உட்புகுந்து சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து அவரை பலாத்தகாரமாக தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமியின் சகோதரி ஏதோ சத்தம் வருவதை கேட்டு நித்திரையில் இருந்து எழும்பிய போதே சகோதரியை இளைஞர் ஒருவர் தூக்கி கொண்டு ஓடுவதை அவதானித்து சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து, அயலவர்கள் வந்ததுடன் சிறுமியை தேடியபோது அவர் அருகில் உள்ள குளக்கட்டுப் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த ஆலய உற்சவத்திற்கு சென்ற 15 வயது சிறுமியை அதிகாலை 1.30 மணியளவில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த போது அங்கிருந்த இளைஞர்கள் அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.
இதன்போது, குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஒடியுள்ளதுடன் அவருடன் சென்ற மாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த நபரை இன்று (23) காலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.