சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

(வரதன்)
சிசீலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.


கடந்தவருடம் கற்றல் செயற்பாடுகளில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற மாணவிகள் அதிதிகளால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இங்கு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வியமைச்சின் தேசிய பாடசலைகளுக்கான பணிப்பாளர் M, ஜெயந்த விக்கிரமநாயக்க கலந்து கொண்டார்.சிறப்பு அதிதியாக மட்டு வலய கல்விப்பணிப்பாளர் .K.பாஸ்கரன் மற்றும் கேர்ட்டக் கல்விப்பணிப்பாளர் .A.சுகுமாரன் மற்றும் கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டார்.