மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் தேசிய கணித ஒலிம்பியாட் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர்.


(க. விஜயரெத்தினம்)

மாகாண கணித ஒலிம்பியாட் பரீட்சையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளான ஜெயக்குமார் கிருண்மயி, ஏரம்பமூர்த்தி அக்ஷாணி ஆகிய இருவரும் சித்தியடைந்து தேசிய கணித ஒலிம்பியாட் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இக்கல்லூரியில் இருந்து தேசிய மட்ட போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

இவர்களுக்கு அதிபர்  திருமதி. திலகவதி ஹரிதாஸ் மற்றும் கல்லூரி சமூகம் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.