அகில உலக ராமகிருஷ்ண மடம் தலைவர் மட்டக்களப்பு விஜயம்

45 வருடங்களின் பின் அகில உலக ராமகிருஷ;ண மடம் மற்றும்  ராமகிருஷ்ண மிஷனின் உதவித் தலைவரும் சென்னை  ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான பூஜைக்குரிய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜீ மகராஜ் அவர்களை மட்டக்களப்பு விமான நிலையத்தில் அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி வி.விவேகானந்தராஜா, மாநகர ஆணையாளர் திரு.வி.தவராஜா, வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.கே.பாஸ்கரன் மற்றும் பிரமுகர்கள் ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கல்லடி மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள், வர்த்தகசமூகத்தினர் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலை, விவோகந்த கல்லூரி, சக்தி வித்தியாலயம், விநாயகர் வித்தியாலய ஆசிரியர் மற்றும் மாணவர்களால் ஊர்வலமாக மேளவாத்தியத்துடன் மாணவர்கள் காவிச்கொடி அசைத்து கலாச்சார நடனத்துடன் கல்லடி உப்போடை ஸ்ரீ  ராமகிருஷ்ண மிஷன்க்கு அழைத்துத்செல்லப்பட்டார்.