நல்லாசிரியன் ஒரு சமூகவழிகாட்டி


''நல்லாசிரியன் ஒரு சமூகவழிகாட்டி' எனும் என் ஆசிரியரின் ஆசியுரைக்கிணங்க அப்புராமன் ரவீந்திரன் ஆகிய எம் வகுப்பு பொறுப்பு விரிவுரையாளரானவர் 1957.07.01 அன்று இம் மட்டு மண்ணில் உதித்து ஏறாவூரை பிறப்பிடமாகவும் தற்போது மட்டகளப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையை அண்மித்த பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

2017.07.01 அன்று இவருக்கு வயது அறுபது என்பதை முன்னிட்டு எழுதப்படும் இவ்வுரையானது அவரது வயதை நினைவு கூறுவதற்கு அல்ல. அவரின் சேவைதனை சீர்தூக்கிப்பார்பதற்கு.

நாம்   2016.06.30 அன்று ஆசிரியப்பயிற்சிக்காக இம் மட்டகளப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில்  காலடி எடுத்து வைத்தோம். அன்று முதல் இன்று வரை எம்மால் அளவிட முடியாத ஒரு கொடை வள்ளலாகவும் சிறந்த படைப்பாளியாகவும் திகழ்பவர் எம் ஆசான்.

அவரது தோற்றமோ இளமை குறையாதது. கன்னியமான பேச்சும் சீரான நடையுடை பாவங்களும் கம்பீரமான தோற்றமும் முகமலர்ந்த புன்னகையும் என்றும் மாறாத அவருக்கே உரிய சிறப்பாகும். அய்யா உமை வாழ்த்திட இப்பக்கம் போதாது. இருந்தும்  சொல்கிறேன் என் மனதில் உதித்தவற்றை நீர் எம் ஆசிரியராக கிடைத்தது நாம் செய்த பாக்கியமே. நீர் எம்முடன் இருக்கும் வரையில் உணரவில்லை உம் அருமை பெருமைகளை. நீர் ஓய்வு பெறும் இந்நாளை எம்மால் ஏற்கவும் முடியவில்லை.

நீங்கள் 1971 இல் வர்த்தக உதவி ஆசிரியராக உங்கள் சேவையினை தொடங்கி 2006 தொடக்கம் 2017.06.30 வரையிலும் எமது கலாசாலையில் அரும்பணி பல செய்து இன்று ஓய்விற்கு செல்கிறீர்கள்.

இது நிச்சயம் ஓய்வு அல்ல. உங்கள் வயது உங்கள்   சேவையை தடுத்திருந்தாலும் உங்கள்  எண்ணங்ளும் சிந்தனைகனுளும் செயலாற்றுகை திறனும் புத்தாக்க படைப்புகளும்  மற்றோருக்கு உதவும் மனப்பாங்கும் தோள் தட்டி ஆர்வமூட்டும் உம் நல் எண்ணமும் என்றும் ஓய்வு பெறப்போவதில்லை.
ஒன்றுமறியா பேதைகளாய் வந்த எம்மை 'உம்மால் முடியுமென' ஊக்கமருந்தேத்தி கலைகள்; பல கற்றுத்தந்தீர். சவால்களை சாதனையாக்கலாம் என புரிய வைத்தீர். நீர் எமக்கு நல்ல ஆசான் மட்டுமல்ல சிறந்த தந்தையும் கூட. '

நல்ல மனைவி அமைவதெல்லாம் கடவுள்  கொடுத்த வரம';  என்பதற்கிணங்க திருமதி. ரவீந்திரன் அம்மை எமக்கு கிடைத்த இன்னொரு தாய். தித்திக்கும்  உணவு பரிமாறி எம் இன்ப துன்பங்களை பகிர்ந்திட்டீர். மீள முடியா துயரையும்  மீண்டு வந்து வாழ வழி காட்டினீர். மேடை பேச்சுதனிலே பல மகான்களும் அதிதிகளும்  உமை பாராட்டி பேசும் போது  எமை அறியாமலே எம் அனைவரது கண்களிலும் கண்ணீர் மழ்கியதிலிருந்து  தெரிந்து கொண்டோம் அய்யா உம் சேவைதனை. உனைபோல் ஒருவன் பிறக்கப்போவதுமில்லை. உம் இடத்தை யாரும்  நிரப்பபோவதுமில்லை. நும் அன்பாலும் வழிகாட்டலாலும் ஆசானின்  ஆசி பெற்ற சீடர்களாய் என்றும் இப் பூமியிலே அயராது பாடுபட நாம் தயாரே. நீர் எமக்கு மட்டுமல்ல பல சமூகங்களுக்கு  வழி காட்டிய பெருந்தகையே. என்றும் உமது சேவை எமக்கு  தேவை.

நன்றியுடன் ஆசிரிய மாணவி
செல்வி.ச.சுசீமா
அரசினர் ஆசிரியர் கலாசாலை
மட்டகளப்பு.