தாண்டியடி ஶ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் காற்பந்து போட்டியில், முதலைக்குடா வினாயகர் சம்பியன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள தாண்டியடி ஶ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.


உயிர் நீத்த உறுவுகளின் ஞாபகாத்தமாக நடைபெற்ற இப் ​போட்டியானது கழகத்தின் தலைவர் வைரமுத்து லோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.


40 விளையாட்டு அணிகள் பங்கு கொண்ட இப் போடடியின் இறுதிச் சுற்றுல் முதலைக்குடா வினாயகர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பனையறுப்பான் கஜமுகா விளையாட்டு கழகம் மோதிக்ககொண்டதில் 0:2 என்ற கோல்கள் விகிதத்தில் முதலைக்குடா வினாயகர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று சம்பியனானது.


இதில் பனையறுப்பான் கஜமுகா விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும், கொத்தியாபுலை ஶ்ரீ கிருஸ்ணா கழகம் 3ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கிவைத்தார்.

இதன்போது, தாண்டியடி ஆலய குருக்கள் சிவஶ்ரீ சஜீவ சர்மா, பிள்ளையார் ஆலய பரிபாலனசபை தலைவர் வே. கோவிந்தசாமி, ஶ்ரீ முருகன் ஆலய செயலாளர் தி. வேணுராஜ், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சா.சின்னத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.