பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு

(இ.சுதாகரன்)


கல்வி அமைச்சின் விசேட செயற்றிட்டத்தின் கீழ் நாட்டின் 10165 அரச பாடசாலைகளில் தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டமானது 29 முதல் 31 வரையான மூன்று தினங்களிலும் கட்டாய டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்று நிருபத்திற்கு  அமைவாக நாட்டின் சகல பாடசாலைகளிலும் நேற்றைய தினம் விசேட டெங்கு ஒழிப்பு சிரமதானம் முழுமையாக நடைபெற்றது.

அதற்கமைவாக பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்திலும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் வித்தியாலயத்தின் முதல்வர் சி.பேரின்பராசா தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.

இதில் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.