புனரமைக்கப்படவுள்ள பொலநறுவை - மட்டக்களப்பு ரயில் பாதை

பொலநறுவை மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் பாதை இரண்டு வருட காலப்பகுதிக்குள் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பொலநறுவை ரயில் நிலையத்தை பார்வையிட்டபோதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த ரயில் பாதையின் அபிவிருத்திக்கு இடையூறாக இருக்கும் சட்டவிரோத கட்டடங்கள் சட்டவிரோக குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

காணிகளை பொறுப்பேற்கும் போது சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு அநீதி நிகழாதவாறு பணிகள் இடம்பெறவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ரயில் பாதை புனரமைக்கப்பட்ட பின்னர் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.